ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் செய்திகள்

குழந்தையை உயிருடன் புதைத்த தாய் – அதிர்ச்சி தகவல்!

குருநாகல் – தும்மலசூரிய, மரக்களமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் பிறந்த குழந்தையொன்றை பிரசவித்து உயிருடன் வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாய் ஒருவர் பிறந்த குழந்தையொன்றை பிரசவித்து உயிருடன் வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக நபரொருவர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அறிக்கையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த தாய் தும்மலசூரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டமா? – பொலிஸ் உளவாளி தகவல்

jvptamil

8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – மக்களே அவதானம்

jvptamil

பஸ்களில் பயணிகளை அழைத்து செல்லல் – கைது செய்ய நடவடிக்கை

jvptamil

Leave a Comment