ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் முக்கிய செய்திகள்

மோசடி குடும்பம் சிக்கியது – மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை தற்காலிய வதிவிடமாகவும் கொண்ட அனோசன் மற்றும் அவரது மனைவி ஹம்சபிரியா ஆகியோர் பல்வேறு நிதிமோசடி மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்னணி கட்டட நிர்மாண குழும நிறுவனத்தில் முக்கிய கடமைகளில் இருந்த இருவர் உட்பட்ட குழுவினர் இவ்வாறு நிதிமுறைகேடுகளும் ஆவண முறைகேடுகளிலும் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த இருவர் உட்பட்ட குழுவினர் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நிறுவனத்தின் சட்டத்துக்கு அமைய இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்கள் பணி் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிதிமுறைகேடுகள் குறித்த ஆதாரங்களுடன் நிதி மோசடிப்பிரிவி்ல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த தீவிர விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு முன்னெடுத்து வருவதாக அத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அனோசன் மற்றும் அவரது மனைவி ஹம்சபிரியா ஆகியோர் புதிய கட்டட நிறுவனம் ஒன்றை வெள்ளவத்தை IBC வீதியில் புனரமைத்து வருவதாக அறியப்படுகின்றது.

தவறாக சம்பாதித்த பணத்தை வைத்தும் தான் UDAஇன் முன்னாள் பொதுப்பணிப்பாளரின் மாணவர் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற இவர்கள் இருவரும் இது போன்ற மோசடியில் ஈடுபடலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சுமந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் இடையில் ரகசிய சந்திப்பு?

jvptamil

ஜூலியின் முத்தக் காட்சி வெளியாகி பரபரப்பு!

jvptamil

திருமண நிகழ்வு ஒன்றின் காரணமாகவே நாடு முடக்கப்படவில்லையா?

jvptamil

9 comments

Leave a Comment