ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் செய்திகள்

கிரானில் மக்களுக்கு காணிகள் இலவசமாம் – எப்படி ஒரு சுத்துமாத்து!

கிரானில் உங்களுக்கும் இலவசமாக காணி வேண்டுமா ??? வாங்க உங்களுக்கும் தரலாம் ……
ஆனால் அதற்கு முன் கிரான் பிரதேசத்தில் நன்கொடை என்ற பெயரில் காணி வழங்கி மக்கள் பணியில் தன்னை இணைத்து லவன் எழுச்சி கிராமம் எனும் கிராமம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் தனக்கு தானே பெயர் சூட்டிய கொடைவள்ளல் லவன் யார் என்று தெரிந்து கொள்ளலாம்…
கருணைவான் எனும் கள்ள பெயர் சூட்டிய லவனுடைய பரம்பரையும் அவனது வரலாற்றையும் இந்த கிரான் மண்ணுக்கு அவர் செய்தவற்றை விலாவாரியாக வழங்குவதோடு , அவரது வழித்தோன்றல்களும், அவர்கள் கிரானில் பதித்த ஒரு தடயமேனும் இவரால் வெளிப்படுத்தி உறுதிப்படுத்த முடியுமா ? கிரான் கிராமம் பழம் பெரும் வரலாற்றைக் கொண்டு குடிமரபிலே குல மக்களை இணைத்துக் கொண்டு காலம் காலமாக தனித்துவமான பண்பாட்டையும் நாகரீகத்தையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்கும் ஒரு பழம்பெரும் கிராமம் ஆகும் .
கிராமத்தில் அவருடைய அம்மாவும் அப்பாவும் (பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர் சிங்கள ) கூட வேறு இடத்தில் இருந்து வந்தவர்களே இவருக்கு இங்கு வரலாறும் கிடையாது வம்சமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது பரம்பரையே இல்லாதபோது பரம்பரை காணி எப்படி என்பதுதான் வியப்பில் ஆழ்த்துகின்றது.
கிரானில் இரவல் காணியில் வாழ்ந்த இவரின் தந்தை கிரானில் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு ஒரு முக்கியஸ்தராக வாழ்ந்தவரும் இல்லை வாழ்பவரும் இல்லை . இவர் ஒரு இந்துவாக வாழ்ந்து பின்னாட்களில் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்ட போது மகன் லவக்குமாரை ஒரு கிறிஸ்தவ மத போதகராக மாற்றினார்.
அதன் பின்னர் லவன் முல்லைத்தீவில் பணியாற்றிய காலத்தில் கள்ளம் கபடமற்ற வெள்ளை உடையோடு வலம்வந்தான் பின்னர் அந்த உடையை களைந்தவன் சாதாரண மனிதரைப்போல் உலவித் திரிந்தான், இதற்கு காரணம் இவன் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றிய போது அங்கு 15 வயது சிறுமியை கற்பழித்த காரணத்தால் அங்கிருந்து விரட்டப்பட்டான்.
#அதன் பின்பு போதைபொருள் கடத்தலிலும் பங்குதாரக செயற்பட்டார்.
#இளம் சமுதாயத்திற்க்கு போதை பொருள் கொடுத்தல்.
#உடல் காமத்தை தூண்டும் காமமாத்திரைகளையும் பரிசாக இளம் சமூகத்தினருக்கு வழங்கி காமலீலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
#தற்போது மதம் மாற்று பேர்வழியிலும் தற்போது அதிக கவணம் செலுத்தி ஈடுபட்டுள்ளார் .
இதன்போது வீட்டுத்திட்டம் ஒன்றுக்காக வந்த சுமார் 710 க்கு மேற்பட்ட லட்சங்களை சுருட்டிக்கொண்டு ஓடிவந்ததையும் முல்லைத் தீவு நண்பர்கள் மூலமாக அறியமுடிகின்றது .
கிரானில் தனது மூன்று தலைமுறையை நிரூபிக்க முடியாத இவன் கிரானில் 1896 ஆம் ஆண்டு முதல் வரலாறு சொல்ல முயல்வது வேடிக்கையான விடயம். கொள்கையும் இல்லை கோத்திரமும் இல்லாத இவன் கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் மிக விரைவில் வெளிவரும் . இவனை ஒரு மனிதனாக மதித்து கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும் இந்து மத குருக்கள் ஒருவரும் தன்னை ஒரு சமூக சேவையாளர் ஆக அடையாளப்படுத்த முனையும் முன்னாள் மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளரும் இவரது பங்குதாரர்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது .
முன்னாள் மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளருக்கு கிரான் கடற்கரையை அண்மித்த பகுதியில் இரண்டு பெரிய காணித்துண்டுகளுக்கு லவன் கள்ள உறுதி தயாரித்துக் கொடுத்துள்ளான் என்பதனையும் அறிய முடிகின்றது. ஒன்று வெள்ளைக்காரனின் கடற்கரைத் தோட்டம் மற்றையது ச.கு முதலாளியிடமிருந்து சீர்திருத்த ஆணைக்குழு சுவீகரித்து இலங்கை மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு வழங்கிய காணியில் தெற்கு பகுதியில் உள்ள காணித் துண்டம் , பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் இருந்தது இதனை இவர் முகாமையாளராக இருந்த காலத்தில் நன்கு அறிந்திருந்தமையினால் அதனை இலகுவாக பற்றிக்கொண்டார் .
அதுமட்டுமல்ல இவனது தந்தை விமலசேனவை கிரானில் தஞ்சமடைந்திருந்த ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவர்தான் தத்தெடுத்து வளர்த்தார். அப்படி இருக்கையில் தற்போது இவர் கிரான் கிழக்கு கடற்கரையோரத்தில் தனது 26 ஏக்கர் காணியில் 12 ஏக்கர் காணியினை 2.5 கோடி ரூபாவுக்கு இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மதிப்புக்குரிய திருவாளர் “குமார் சங்ககார “ உட்படசிலருக்கு 5 துண்டங்களாக விற்பனை செய்துள்ளார் .
இக்காணி பாதர் ஒருவரினால் லவனின் தந்தையான விமலசேன அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக கள்ள உறுதி முடித்துள்ளனர் இதில் 2.5 ஏக்கர் அரச காணியையும் சேர்த்து சங்ககாரவுக்கு விற்பனை செய்துவிட்டார்கள் தற்போது அதற்கெதிராக பிரதேச செயலாளர் வழக்குத்தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமலசேன 2.5 கோடியை என்ன செய்தாரோ தெரியல்ல ?? பாவம் அவரு கையொப்பம் போட்டது மட்டும்தான் , பணத்தை ஆட்டயப்போட்டது லவனும் அவன் சார்ந்த கள்ளக் காணி மாபியாவும்தான் . அது பெரியயயய ரீம் .
மேலும் இவர் கிரானில் 1896 மற்றும் 1898 ஆம் ஆண்டு முதல் தனது பரம்பரைக்கு சொந்தமான காணி என கூறி தற்போது இவன் இலவசம் என கூறி மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் 15 ஏக்கர் காணி உட்பட அண்ணளவாக 32 ஏக்கர் காணி இவருக்கும் இனுமொரு அன்பர் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவே கள்ள உறுதி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை விற்பனைசெய்ய முயன்ற வேளை அதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாகவே இதனை இக்குடும்பங்களுக்கு நன்கொடையாக காணி வழங்குவதாக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் செய்தியைப் பரப்பிவிட்டு காணியைப் பெறும் ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் செலவாக 5,000 ரூபாவும் மேலதிக சில வேலைகளுக்காக 15,000 ரூபாவும் இவனால் அறவிடப்படுகிறதாம் . 240 குடும்பங்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் எனில் சுமார் 48 லட்சம் ரூபாய்.
அப்படியானால் வெள்ளநீர் தேங்கி நிற்கும் தாழ்நில 15 ஏக்கர் காணிக்கு ஏக்கர் 320,000 ரூபா வீதம் விற்பனை செய்து சுமார் அரைக் கோடிக்கு ஒரு காணி வியாபாரம் செய்துள்ளமை புலப்படுகிறது. இவற்றைப்பார்க்கும் போது அப்பாவுக்கும் மகனுக்கும் கிரானில் மட்டும் தெரிந்தளவில் சுமார் 58 ஏக்கர் காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாகவும் அதிசயமுமாகவே உள்ளது. உண்மை ஆதாரங்களுடன் விரைவில் வெளிவரும்.
15 ஏக்கர் காணியை தானமாக வழங்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது விட்டு காணிக்கு அருகில் செல்லும் ஒழுங்கையை மறித்து அடைத்து தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு பக்கத்து வீட்டாரின் வழியினை தடைசெய்து அப்பாவி மக்களை பொலிசில் முறைப்பாடு செய்து அது நீதிமன்றம் வரைக்கும் சென்றது ஊரார் அறிந்ததே.
ஆனால் நீங்கள் ??? தனது காணியில் 10 அடி கூட மக்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த கொடுக்க முடியாத இவன் 15 ஏக்கரை கொடுப்பதில் இருந்து இவனது உள்நோக்கத்தை மக்கள் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எது எப்படியோ இவனும் இவனது சகாக்களும் கிரானிலுள்ள அரச காணிகளையும் இனந்தொரியாத தனியார் காணிகளையும் ஆட்டயப்போடுறத்தோட கிரான் கிராமத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் சீர்குலைத்து மத நல்லுறவை மக்களிடையே குலைத்து ஒரு பெரும் குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் குளிர்காய முற்படுகின்றனர் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
அத்தோடு இதனை விளம்பரப்படுத்தி வெளிநாட்டு நிதிகளை பெறுவதும் அதனை கொள்ளையடிப்பதும் திட்டமாம். அதுமட்டுமின்றி கள்ளனுக்கு எலக்சன் கேக்கிற ஐடியாவும் இருக்காம்!! வெண்டுத்தாலும் கிழிஞ்சிது போ!!! இக்காணியில் குடியேறி தங்கள் பணத்தினை செலவழிப்போர் அனைத்தையும் இழக்க நேரிடும்.
கனமாக சிந்தித்து செயற்படுங்கள். இதனை நன்கு புரிந்து கொண்டு காணி பெறும் மக்களும் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கிரானூர் மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
ஆதாரங்கள் மிக விரைவில் .
நன்றி –
” அமைதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாதே எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது “
– கிரானூரான் –

Related posts

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டமா? – பொலிஸ் உளவாளி தகவல்

jvptamil

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய வகை கொரோனா…!

jvptamil

தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களே ஒருகணம் இதை படியுங்கள்….

jvptamil

Leave a Comment