ஜனநாயக விடுதலைப் போராளி
சீரியஸ் கதை செய்திகள்

உயிரிழந்தவருக்கு அருகில் செல்வதும் சிக்கல் – வைத்தியசாலையில் வெளியான தகவல்

இரவு உணவை உட்கொண்ட பின்னர், நித்திரைக்குச் சென்ற 71 வயதான நபரொருவர் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவம் காலி அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அவரது மனைவி தேநீருடன் சென்று அதிகாலை 5.30 மணிக்கு எழுப்பியுள்ளார். எனினும், அவர் எழும்பவில்லை, எவ்விதமான அசைவுகளும் அவரிடம் தென்படவில்லை. அதனையடுத்து அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்துள்ளார்.

எனினும், அக்கம் பக்கத்தினர், ஓடோடிவந்து அவரை எழுப்பியுள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சடலம், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போ​து, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளை திறக்கும் திகதி இன்று வெளியானது!

jvptamil

அரசியலில் சந்திரிக்காவின் மகன்? – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

jvptamil

அதிகரிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை!

jvptamil

Leave a Comment