ஜனநாயக விடுதலைப் போராளி
இதென்ன? செய்திகள்

தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களே ஒருகணம் இதை படியுங்கள்….

பரீட்சையில் தோற்று வாழ்வில் வெற்றியீட்டியவர்கள் இல்லையா ?
ஊராரின் பழிச் சொல்லுக்கு ஆளாகி உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்தவர்கள் இல்லையா ?
உண்ண உணவின்றி இருந்து ஊருக்கே உணவளிக்குமளவுக்கு உயர்ந்தவர்கள் இல்லையா ?
குடும்ப கஸ்டத்தில் திழைத்து பல குடும்பங்களை காக்கும் அளவுக்கு உயர்ந்தவர்கள் இல்லையா ?
மனைவி பிரிந்து சென்றதும் தனியே நின்று பிள்ளைகளை சாதனையாளர்களாக்கிய அப்பாக்கள் இல்லையா ?
அல்லது கணவன் பிரிந்து சென்றதும் தனியே நின்று பிள்ளைகளை சாதனையாளர்களாக்கிய அம்மாக்கள் இல்லையா ?
காதலி/ காதலன் பிரிந்து சென்றதும் பின்னர் அவர்களுக்கு அன்பான கணவன் / மனைவி கிடைத்து வாழ்ந்தவர்கள் இல்லையா ?
கடன் சுமையில் இருந்து கடன் கொடுக்குமளவுக்கு உயர்ந்தவர்கள் இல்லையா ?
வேலை அற்றுப்போய் பல பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு வாழ்ந்து காட்டியவர்கள் இல்லையா ?
பல கோடி பேர் உள்ளனர்…
அனைவரும் சாவை தள்ளிபோட்ட நபர்கள்…
உலகத்தில் உயர்ந்தவர்களை பார் அவர்கள் கதைகளை படி உன்னைவிட மிக மோசமான நிலையில் இருந்துதான் வந்திருப்பார்கள்…
தற்கொலை உனக்கு தீர்வாக அமையலாம்….
ஆனால் நீ உன்னை நம்பியவர்களுக்கு பிரச்சினையை ஆரம்பித்துவிட்டு செல்கிறாய்….
மனிதன் பயப்படுவது இறப்பதற்கு அதையே செய்ய துனிந்த நீ எவ்வளவு தைரியசாலி…..
உன்னைப்பற்றிய பிழையான கதைகள் பேச்சுக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒரு குறுகிய காலத்திற்கே….
அந்த குறுகிய காலத்தை கடக்கும் அளவுக்கு மன தைரியத்தை வளர்த்துக்கொள்….
உலகை ஆள பிறந்த நீ…
உன்னை நம்பியவர்களை அழ வைத்து போகாதே….
“நீ இல்லாமல் போவதால் இந்த உலகில் எதுவுமே மாறப்போவதில்லை”


சோலையூர்_காண்டீபன்..

Related posts

கிரானில் மக்களுக்கு காணிகள் இலவசமாம் – எப்படி ஒரு சுத்துமாத்து!

jvptamil

பஸ்களில் பயணிகளை அழைத்து செல்லல் – கைது செய்ய நடவடிக்கை

jvptamil

ஆடைத்தொழிற்சாலையில் மீண்டும் தீவிரமாக பரவிய கொரோனா!

jvptamil

Leave a Comment