ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் செய்திகள்

தோலுரிக்கப்பட்ட காணி மாஃபியாக்கள் – மலையகத்தை ஆட்டும் அரசியல் வாதிகள்

சென்மேரிஸ் கல்லூரியின் காணி அபகரிப்பில் ஈடுபட்ட காணி மாஃபியாக்கள் கடந்த வாரம் தோலுரிக்கப்பட்டார்கள்.

நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் இதில் ஈடுபட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக ஊடகங்களில் தெரியப்படுத்தப்பட்டது.

மேலும் இதில் பாடசாலைக்காகவும் பிரதேச குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் காணியை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் பணிபுரிந்த பழைய மாணவர்களும் பழைய மாணவ சங்க செயலாளரையும் தனிப்பட்ட ரீதியில் அவர்களுடைய சமூகம் குடும்பம் என்பன கருத்தில் கொள்ளாமல் , தன்னுடைய பதவியின் அருமை புரியாமல் அடிமட்ட புத்தியுடன் கீழ்தரமான வார்த்தைகள் கையாண்டு தொலைபேசியில் மிரட்டிய குழந்தை வேலின் அடாவடிகளை சமூகம் தெரிந்திருக்கும்.

சமூகத்தின் வளர்ச்சி என்றும் பாராமல் தான் கற்ற பாடசாலையை காட்டு கொடுக்கும் சில துரோகிகளையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

இது வரை காலமும் எங்கள் தாயும் பாடசாலையும் ஒன்று என்று கூக்குரலிட்ட கேவலமானவர்கள் இன்று பாடசாலைக்கு எதிராக காட்டி கொடுப்பது ஆச்சர்யம் இல்லை அது அவர்களின் பிறப்பின் வெளிப்பாடு.

இருந்தாலும்

#ஒட்டு மொத்த மாணவ சமூகத்தையும் கேவலப்படுத்தியது

# பாடசாலை காணியை அபகரிக்க முற்பட்டது

#மாணவர்களை அரசியல் சாயம் பூசியது

# மண் கொட்ட ஒரு கோடி என பொய் சொன்னது.

# பாடசாலை பெயரை கலங்கப்படுத்தியது.

# இது வரை இடம்பெறாத பாடசாலை அபிவிருத்திகளை தான் செய்தாக செய்தி வெளியிட்டது

# பழைய மாணவ சங்கத்தின் செயலாளரை தனிப்பட்ட ரீதியில் தாக்கியது

என்பன ஏற்கமுடியாத குற்றமாகும். எனவே உடனடியாக இது சம்பந்தமாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் . மேலும் பாடசாலை காணியை அபகரிக்க லாம் என்கிற கேடுகெட்ட புத்தியை விட்டுவிட வேண்டும். கடைசியாக கட்சி உங்களை வைத்திருந்தால் இதுவே கடைசியாக இருக்கும் இனி போலி அறிக்கைகள் கொடுத்தால் மேலும் பல தகவல்கள் வரும்.

Related posts

உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரின் கண்ணீருடனான கோரிக்கை!

jvptamil

உயிரிழந்தவருக்கு அருகில் செல்வதும் சிக்கல் – வைத்தியசாலையில் வெளியான தகவல்

jvptamil

மோசடி குடும்பம் சிக்கியது – மக்களுக்கு எச்சரிக்கை

jvptamil

Leave a Comment