ஜனநாயக விடுதலைப் போராளி
அசிங்கம் செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காவாலிகளினால் உயிருக்கு போராடும் மாமனார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காவாலிகளின் சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாவணவ சங்க செயலாளருக்கு விடுத்த கொலை மிரட்டல், மற்றும் மார்ப்பிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதை கேள்வியுற்ற செயலாளரின் உறவினர் (மாமா) மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மிகவும் கீழ்தரமான புகைப்படங்கள் பதிவேற்றிய ரவி குழந்தை வேலின் போலி முகப்புத்தகமான ஆதிபாண்டியன் எனும் முகப்புத்தகத்தில் மார்ப்பிங் புகைப்படங்கள் பதிவாகி பகிரப்பட்டிருந்தன. அதைனை கேள்வியுற்ற செயலாளரின் மாமனார் மாரடைப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் மது போதையில் ஜீவனின் பிரத்யேக செயலாளர் தயாளன், ரவி குழந்தை, ஜீவன் முதலியோர் இருக்கையில் இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து பொறுத்து கொள்ள முடியாமல் பழைய மாணவர் சங்கம் செயலாளரின் மனைவி தனது தந்தைக்கு எடுத்து கதறி அழுதுள்ளார்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட படங்களை அந்த பெண்ணின் தகப்பனாரும் பார்த்து அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கிட்டத்தட்ட 100000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செய்யும்  பொகவந்தலாவ பிரதேசமும் கொந்தளித்து இருக்கின்ற சமயத்தில் இதுவரை எந்த ஒரு கருத்தையோ அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையோ கட்சி மேலிடம் எடுக்க வில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் செயலாளரின் மைத்துனருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொலைபேசி அழைப்பில் மிரட்டிய பதிவுகள் மிக சீக்கிரம் வெளியிடப்படும்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபருக்கு ஏதும் ஏற்பட்டால் ஜீவன் தொண்டமான், பிரத்யேக செயலாளர் தயாளன் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தை வேல் மூவருமே பொறுப்பு கூற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரின் கண்ணீருடனான கோரிக்கை!

jvptamil

நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை!

jvptamil

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் கவனத்திற்கு!

jvptamil

1 comment

Leave a Comment